Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஐபிஎல் போல சினிமாவும் ஒத்திவைக்கப்படுமா - உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை ட்வீட்

இன்று தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் பிரபல நடிகர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் ஒரு சர்ச்சைக்கு ட்விட்டை பகிர்ந்திருந்தார். அதில் அவர் ஐபிஎல் போல சினிமா ரிலீசும் தள்ளி வைக்கப்படுமா என கேட்டிருந்தார்.

"ஐபில் #IPL போட்டிகள் போல் தமிழ்நாட்டில் தமிழ் திரைப்படங்கள் வெளியீடுகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை ஒத்திவைக்கப்படுமா.. ? செயல்படாத மத்திய மாநில அரசுகளின் கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்க்க உதவுமே.." என உதயநிதி கூறியிருந்தார்.

"ஐபிஎல் விளையாட்டு பொழுதுபோக்கு என்றால், சினிமாவும் பொழுதுபோக்குத்தானே... ஆகையால், பட வெளியீட்டை நிறுத்தினால், இன்னும் பலருடைய கவனத்தை ஈர்க்க முடியும்," என அவர் மேலும் கூறியுள்ளார்.

இதற்காக அவரை பலரும் தற்போது சமூக வலைத்தளங்களில் விமர்சனம், கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இது பற்றி பதில் அளித்துள்ள நடிகர் விஷால் "இது குறித்து அரசு தான் முடிவெடுக்க முடியும் என கூறியுள்ளார்".

Comments