Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓவியாவுக்கு வாழ்த்து கூறிய பிக் பாஸ் வில்லி ! என்ன சொன்னார் தெரியுமா !

தமிழ்நாட்டு மக்களின் நீங்க இடம் பிடித்த ஒரே நடிகை என்றால் அது ஓவியா தான். பிக் பாஸ் நிகழ்ச்சி தனது இயல்பான குணத்தால் எல்லார் மனதையும் வென்றவர்.

இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு ரசிகர்களுக்கு வாழ்த்து மழையை பொலிந்து வருகின்றனர். ரசிகர்கள் ஒரு பக்கம் இருக்க, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களும் வாழ்த்துக்கள் கூறினார்கள்.

குறிப்பாக பிக் பாசில் வில்லியாக பார்க்கப்பட்ட காயத்ரி ரகுராம் அமெரிக்காவிலிருந்து வீடியோ மூலம் அவருக்கு வாழ்த்துக்கள் கூறினார், அவர் கூறுகையில், பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஓவியா, பிக் பாஸ் மூலம் உனக்கு கிடைத்த புகழ் போல் சினிமாவிலும் நிறைய படங்களில் நடித்து புகழ் பெறவேண்டும், இதை என் மனதிலிருந்து சொல்கிறேன் என கூறினார். அதற்கு ஓவியாவும் மிக்க நன்றி உங்கள் அன்புக்கு, கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என ட்வீட் செய்தார்.