Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலா பாடல் வெளியீட்டில் ரஜினியின் அரசியல் களமா !- வெளியான தகவல் !

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்த மாதம் 9ம் வெளிவரவிருக்கும் படம் காலா. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நாளை சென்னை நந்தனத்தில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இது வெறும் காலா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவாக மட்டும் இருக்காது என்கிறார்கள். ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு அழைப்பிதழ் சென்றுள்ளது.

காலா பாடல் வெளியீட்டை ரஜினி தனது அரசியல் வருகைக்கான ஒரு முன்னோட்ட களமாக அமைக்கவுள்ளாராம். காலா படத்தை பற்றி சிறிது பேசிவிட்டு அரசியல் வருகையை பற்றி தான் அதிகம் பேசுவார் என்கிறார்கள் ரஜினி வட்டாரம்.

Comments