Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலாவில் அரசியல் மசாலா ஜாஸ்தி - வெளியான தகவல்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா திரைப்படம் அடுத்த மாதம் ஜூன் 7ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இன்று மாலை மிகப்பெரியளவில் பிரம்மாண்ட பாடல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொள்ளவுள்ளனர். ஏற்கனவே பாடல்கள் அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, இந்நிலையில் இப்படத்தில் ரஜினி சமூக அரசியலை பற்றி அதிக பேசும் படமாக இந்த படம் இருக்கும் என்கிறார்கள்.

அதை உறுதி செய்யும் வகையில் போராடவும் போராடவும் பாடல், கெளம்பு கெளம்பு என வரும் பாடல்கள் சமூகத்தில் நடக்கும் அநீதிகளை தட்டி கேட்கும் பாடலாக ஒலிக்கிறது. ஆக மொத்தத்தில் காலா ரஜினியின் அரசியல் அவதாரத்துக்கு அஸ்திவாரம் போடும் படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Comments