Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியால் மக்களுக்கு என்ன பயன், இந்த நேரத்தில் இப்படி ஒரு விஷயம் தேவையா? ரஜினியை தாக்கும் தாடி பாலாஜி

தமிழ் சினிமாவில் நடந்த ஸ்ட்ரைக் பிறகு ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் பெரிய படம் என்றால் ரஜினியின் காலா. இப்படமும் ரிலீசுக்கு தயாராகி விட்டது, படத்தின் பாடல்களும் இன்று வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் காமெடி நடிகர் தாடி பாலாஜியின் ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர், நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்கிறது, இந்த நேரத்தில் காலா படத்தின் ரிலீஸ் தேவையா. இதனால் மக்களுக்கு என்ன பயன், கலை துறையில் இருப்பவர்கள் அனைவரும் மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும்.

அவர் தான் துணை நிற்க வேண்டும் ஆனால் காலா பட பிஸியில் இருக்கிறார், இது என்னுடைய கருத்து. அடுத்து காலா பட ஆடியோ வெளியீடு வைத்திருக்கிறார்கள், இந்த நிகழ்ச்சி இப்போதைக்கு தேவையா என்பது தெரியவில்லை என பேசியுள்ளார்.

Comments