Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாட்ஷா, படையப்பாவிற்கு பிறகு காலாவில் தான் இந்த விஷயம் நடந்தது - ரஜினிகாந்த் !

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்த மாதம் வெளிவரவிருக்கும் படம் காலா. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், காலா தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படம்,

இப்படத்தை இயக்கிய பா. ரஞ்சித் என்ன ஒரு சமூக அறிவு, இந்த வயதில் தெளிவான சிந்தனை, கூட இருக்கிறவங்களை மேலே உயர்த்தி பார்க்கும் மனசு பெரிய மனசு. இந்த படத்தில் ஒரு விஷயம் எனக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு நடந்தது,

இத்தனை வருஷத்தில் எனக்கு இரண்டு வில்லன் தான் பேர்சொல்லும் படி இருந்தார்கள். அதாவது பாஷாவில் எப்படி ஆண்டனியோ, படையப்பாவில் எப்படி நீலாம்பரியோ அப்படி இந்த படத்தில் எனக்கு சக்திவாய்ந்த வில்லனாக (வர்ஷா) நானே படேகர் அமைந்துள்ளார். நாங்கள் இரண்டு பேரும் போட்டிபோட்டு நடித்துள்ளோம், எனக்கே குஷி வந்திருச்சு ஒரு கட்டத்தில் என ஜாலியாக பேசினார்.

Comments