Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் அசோக் செல்வனின் காதலி சூப்பர் சிங்கர் பிரபலமா?- புகைப்படத்துடன் வைரலாகும் தகவல்

பிரபலங்களை பற்றி கிசுகிசு வரவில்லை என்றாலே பெரிய ஆச்சரியம். தமிழில் சூது கவ்வும், தெகிடி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அசோக் செல்வன். இவரை பற்றி சமீபகாலமாக ஒரு கிசுகிசு பரவி வருகிறது.

அதாவது சூப்பர் சிங்கர் என்ற பாடல் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பிரகதியை இவர் காதலிக்கிறார் என்றும் விரைவில் இவர்களது திருமணம் நடைபெற இருப்பதாகவும் ஒரு புகைப்படத்தால் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுகின்றன.

இதனை பார்த்த பிரகதி குரு தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் நிறைய பேர் ஒரு செய்தியை பார்த்து என்னுடைய திருமணம் பற்றி கேட்கிறார்கள். இப்போதைக்கு திருமணம் பற்றி எண்ணம் இல்லை, அப்படி நடந்தால் கண்டிப்பாக தெரிவிப்பேன் என்று பதிவு செய்துள்ளார். ஆனால் அசோக் செல்வன் குறித்து எதுவும் பேசவில்லை.

Comments