Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உயிருக்கு போராடிய பெண்ணுக்கு கமல்ஹாசன் செய்த மிகப்பெரிய உதவி - குவியும் பாராட்டு

மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கி தற்போது பல்வேறு மக்கள் பிரச்சனை பற்றி பேசி வருகிறார் நடிகர் கமல்ஹாசன். அடிக்கடி மக்களை நேரில் சந்திக்கவும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறார் அவர்.

நேற்று மதியம் குளச்சலில் இருந்து கருங்கல் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார் கமல்ஹாசன். அப்போது அந்த வழியில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த 2 பெண்கள் மீது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. அதில் ஒரு பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது, அதை பார்த்த கமல்ஹாசன் உடனே தன் காரில் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஆம்புலன்ஸுக்கு காத்திருந்தவர்களுக்கு கமல் செய்துள்ள உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.