Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சொடக்கு போட்டு சவால் விட்ட விஷால் - இரும்புத்திரை சக்ஸஸ் மீட்டில் ஆவேசம் !

நடிகர் விஷால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் இரும்புத்திரை. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிநடை போட்டு வருகிறது, ஆனால் இந்த ரிலீஸ் ஆகுமா, ஆகாதா என்ற நிலையில் 10ம் தேதி வரை இருந்ததாம்.

இதுபற்றி நடிகர் விஷால் சக்ஸஸ் மீட்டில் பேசுகையில், படம் எல்லாருக்கும் பிடித்தது மிகுந்த மகிழ்ச்சி, சங்க தலைவரான என்னையே சுத்தல்ல விட்டுட்டாங்க, 10 ம் தேதி இரவு 8 மணிக்கு மேல் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. எனக்கு பணத்தோட அருமையை புரிய வைத்தார்கள்.

இந்த படம் ரிலீஸ் ஆக கூடாது பல வேலைகள் செய்தார்கள். ஆனால் சொடக்கு போட்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்றுமே நேர்மையா இருக்கும், எல்லா தயாரிப்பாளரும் ஜெயிக்க வைக்கிறது தான் எங்க வேலை. நான் பார்த்த அந்த 10 மணிநேரம் என் வாழ்க்கையை புரட்டி போட்ருச்சு, பணத்தோட அருமை என்ன னு எனக்கு புரிய வைத்தார்கள் என உணர்ச்சிவசப்பட்டு பேசினார் விஷால்.

Comments