Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி!

இந்தியளவில் பிரபலமானவர் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி. பாலிவுட் ஸ்டைல் ஹீரோ என பலராலும் அழைக்கப்பட்டுள்ளார். அவர் நடித்த டிஸ்கோ டான்சர் படம் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்தது. 300க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள திறமையான நடிகர்.

அவரின் முதல் படமான Mrigayaa ல் அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. மணிரத்னம் இயக்கத்தில் வந்த தமிழ் பட மொழியாக்கத்திலும் இவரை பார்க்கலாம்.

தமிழில் யாகாவாராயினும் நாகாக்க படத்தில் நடித்திருந்தாராம். தற்போது இவருக்கு வயது 70. கடந்த பல மாதங்களாக இவர் உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வருகிறார்.

ஏற்கனவே அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து வந்த நடிகர் அண்மையில் தான் இந்தியா திரும்பினாராம். இந்நிலையில் அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட தற்போது டெல்லியில் உள்ள தனி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.

Comments