Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எனக்கு நடிக்கத் தெரியாது, நான் ஹீரோ: ஏன் இப்படி சொன்னார் விஜய் ஆண்டனி?

இசையமைப்பாளராக ஜெயித்து அதன் பிறகு ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அவர் நடித்துள்ள காளி படம் விரைவில் திரைக்கு வருகிறது.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் இந்த படம் நடிகர் விஜய் ஆண்டனிக்கான படமா என கேட்டதற்கு நான் நடிகன் இல்லை என பதில் கூறியுள்ளார் அவர்.

"நான் நடிகன் கிடையாது, எனக்கு நடிக்கத் தெரியாது. நான் ஹீரோ என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். ஹீரோ என்பது ஆக்‌ஷன், பில்டல்புகள், ஸ்லோமோஷனில் நடந்து... அப்படிப்பட்ட ஹீரோ நான் கிடையாது. பறந்து பறந்து அடிக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்க மாட்டேன். ஆளுமை, குணாதிசயம், நல்லவன் என்பதுதான் ஹீரோ என்பதற்கு என்னுடைய அளவுகோல்கள்" என விஜய் ஆண்டனி கூறினார்.

Comments