Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜீ.வி.பிரகாஷுக்கு கிடைத்த மிகஉயரிய கெளரவம் - புகைப்படம் உள்ளே

ஜீ.வி.பிரகாஷ் - இசையமைப்பது, நடிப்பது என சினிமா துறையோடு தன் வட்டத்தை சுருக்கிகொள்ளவில்லை. பல்வேறு தமிழர் பிரச்சனைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் அவர்.

ஜல்லிக்கட்டு போராட்டம் துவங்கி மீனவர், ஸ்டெர்லைட் போராட்டம் வரை அவர் சமூக வலைத்தளத்திலும் நேரிலும் தொடர்ந்து அவர் பேசி வந்துள்ளார்.

இந்நிலையில் இவரின் சமுக நல பணிகளை பாராட்டி அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. St.Andrews Theological University International ஜீ.விக்கு இந்த கவுரவ பட்டத்தை வழங்கியுள்ளது.