Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அமீர்கான் ஸ்டைலில் அஜித் எடுக்கும் பெரிய ரிஸ்க்

அஜித் எப்போதும் தன் ரசிகர்களுக்காக புதிய முயற்சிகளை எடுப்பார். சால்ட் அண்ட் பெப்பரில் தைரியமாக நடித்தார்.

எந்த ஒரு ஸ்டெண்ட் காட்சிகள் என்றாலும் டூப்பே இல்லாமல் நடித்தார், தற்போது நடித்து வரும் விசுவாசம் படத்தில் ஒரு ரிஸ்க் எடுக்கவுள்ளாராம்.

அஜித்திற்கு இப்படத்தில் இரண்டு தோற்றம் என்று முன்பே கூறியிருந்தோம், தற்போது வந்த தகவலின்படி இப்போது எடுத்து வரும் காட்சிகள் எல்லாம் கொஞ்சம் வயதான அஜித் காட்சிகளாம்.

சில நாட்களுக்கு பிறகு இளமையான அஜித் காட்சிகள் எடுக்கவுள்ளார்களாம், அதற்காக அஜித் மீண்டும் தன் உடல் எடையை மிகவும் குறைக்கவுள்ளாராம்.

தங்கல் படத்தில் அமீர்கான் எப்படி இரண்டு தோற்றத்தில் வந்தாரோ, அதேபோல் தான் விசுவாசத்தில் தல கலக்கவுள்ளாராம்.