Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விசுவாசம் கதை இதுதானா - பரவி வரும் புதிய கதை !

அஜித் நடிப்பில் சிவாவின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் விசுவாசம். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமராவ் சிட்டியில் நடந்து வருகிறது,

இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது. தற்போது மிகப்பெரிய திருவிழா செட்டில் பிரமாண்டமான பாடல் காட்சியை படமாக்கி வருகின்றனர். இந்நிலையில் விசுவாசம் என்ன கதை என்று பலரும் யோசிக்க , ட்விட்டர் தளத்தில் ஒரு கதை உலா வருகிறது.

அதாவது அண்ணன் அஜித் தன் சொந்த கிரமத்துக்கு தம்பியை பார்க்க சிறையிலிருந்து வருகிறாராம், ஒரு கட்டத்தில் தம்பி அஜித் எதிரிகளால் கொல்லப்பட அவர்களை பழிவாங்க புறப்படுகிறார் அண்ணன் அஜித். அதுமட்டுமில்லாமல் இந்த கதையின் பின்பலமாக நியூட்ரோ அபாயத்தை சொல்லும் சமூக பிரச்னையை களமாக இருக்கும் என்று அந்த கதையில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கதை எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை, ஆனால் கண்டிப்பாக ஒரு கமர்ஷியல் மாஸ் படமாக இருக்கும் என்கிறார்கள்.