Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் படத்தை விட சிம்பு படத்திற்கு அதிக எதிர்ப்பார்ப்பு! உண்மையில் நடந்த விஷயம் இது

அஜித் இன்று தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர். அவர் படங்களுக்கு முதல் நாள் வரும் கூட்டம் நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

ஆனால், அஜித் நடித்த வரலாறு படம் நீண்ட வருடம் கிடப்பில் இருந்து பிறகு தான் ரிலிஸானது என்பது எல்லோருக்கும் தெரியும்.

அந்த படத்துடன் தான் சிம்பு நடித்து இயக்கிய வல்லவன் படமும் வெளியானது.

அந்த சமயத்தில் பல விநியோகஸ்தர்கள் அஜித் படம் கூட வேண்டாம், வல்லவன் தான் வேண்டும் என்று கேட்டு வாங்கினார்களாம், இதை இப்படத்தின் தயாரிப்பாளரே கூறியுள்ளார்.

பிறகு படம் ரிலிஸாகி வரலாறு மெகா ஹிட் ஆக, வல்லவன் பெரும் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.