Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களையும் ஒன்றினைக்க பிரம்மாண்ட பிளான்!

விஜய் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிக்கொண்டே வருகிறது. அவர் அரசியலுக்கு வருவாரா என்றெல்லாம் பேச்சுகள் இன்னும் அடிபடத்தான் செய்கின்றன. ரசிகர்களுக்கு இதில் ஆர்வமும் இருக்கிறது.

வழக்கம் போல இந்த வருடம் ரசிகர்கள் மத்தியில் அது இருக்கும். ஏனென்றால் விஜய்யின் பிறந்தநாள் வரும் ஜூன் 22 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக ரசிகர்கள் தயாராகிவிட்டனர்.

இந்நிலையில் ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களையும் ஒன்றினைக்க பிரம்மாண்ட பிளான் தயாராகி வருகிறது. விஜய்யின் பிறந்தநாளுக்காக ஸ்பெஷல் COMMON DP புகைப்படத்தை வரும் ஜுன் 17 ம் தேதி இரவு 7 மணியளவில் இயக்குனர் அட்லீ வெளியிடுகிறாராம்.

இதற்காக #ThalapathyBdayCDP என்ற டேக்கையும் உருவாக்கியிருக்கிறார்கள். விஜய் நடித்த மெர்சல், தெறி படங்களை இயக்கியவர் அட்லீ என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் தானே.