Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடுத்தது அஜித் தான்! அஜித்தை எதிர்பார்க்கும் பிரபல நடிகை

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார். அவருக்கான ஒரு ஸ்டைல் எப்போதுமே தனி தான். அவருடன் நடிக்க இன்னும் பல இளம் நடிகைகள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

இதில் ஒருவராக தற்போது கீர்த்தி சுரேஷ் வந்துவிட்டார். தற்போது விஜய் 62 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். பைரவா படத்தை தொடர்ந்து மீண்டும் அவருடன் ஜோடி சேர்ந்துளார்.

இந்நிலையில் அவர் சேலத்தில் தனியார் நகைக்கடை திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார். அங்கு அவரை காண பெரும் ரசிகர்கள், ரசிகர்கள் கூட்டம் வந்திருக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

அப்போது விஜய்யுடன் நடித்துவிட்டீர்கள், எப்போது தல உடன் நடிக்கப்போகிறீர்கள் என கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர், விரைவில் அந்த வாய்ப்பு அமையும் என்று எதிர்பார்க்கிறேன் எனக் கூறினாராம்.