Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் சாரிடம் அந்த மாதிரி நடந்துகிட்டீங்கனா அவ்வளவு தான் - அப்பறம் இதுதான் நடக்கும் ! பிரபல இசையமைப்பாளர்

அஜித் சினிமாவில் ஒரு தனி முத்திரை பதித்துவிட்டார். எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் எதையும் கண்டுகொள்ளாமல் அவர் தன் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

அவருடன் பணியாற்ற பலருக்கும் விருப்பம். இதில் காலா படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணுக்கும் ஆசை இருக்கிறதாம். விவேகம் படத்திற்கு இசையமைக்க இவரையும் அணுகினார்களாம்.

அண்மையில் சானல் பேட்டியில் கலந்துகொண்ட அவர் தன் அனுபவம் பற்றி கூறினார். எதிர்பாராத விதமாக அஜித்தை காலா படத்தின் சமயத்தில் சந்தித்தாராம். இருவரும் நன்றாக தான் பேசினார்களாம்.

இதில் விசயம் என்னவெனில் அஜித், சந்தோசிடம் சாரி, நீங்க யாரென இப்போது தான் எனக்கு தெரிந்தது என கூற அவரும் சார் நீங்கள் தெரிந்தவர் போல அன்பாக பழகினீர்கள் மகிழ்ச்சி என சந்தோஷ் கூறினாராம்.

மேலும் அஜித்திடம் பொது இடங்களில் Permission கேட்டிவிட்டு பேசினால் அவர் மிகவும் நன்றாக பேசுவாராம். ஒருவேளை அவரை தொந்தரவு செய்வது போல பேசினால் அவர் படித்திருக்கிறீர்களே? உங்களுக்கும் தெரியும் தானே! பக்குவமாக செயல் படவேண்டும் என அன்பாக சொல்லிவிடுவாராம்.