Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் கமல்ஹாசனின் விஸ்வரூபம் டிரைலரை வெளியிடும் 3 பிரபலங்கள் யார் தெரியுமா?

நடிகர் கமல்ஹாசன் எப்போதும் தன்னுடைய படங்கள் மூலம் ரசிகர்கள் பிரம்மிப்பில் ஆழ்த்த கூடியவர். அப்படி ஒரே ஒரு படம் உதாரணம் கூற வேண்டும் என்றால் விஸ்வரூபம் படத்தை சொல்லலாம்.

கதை, இயக்கம், நடிப்பு தாண்டி நிறைய தொழில்நுட்ப விஷயங்களும் அப்படத்தில் ரசிகர்களின் வரவேற்பு பெற்றது. இப்படத்தின் 2ம் பாகம் எப்போது வெளியாகும் என்ற பெரிய ஏக்கம் ரசிகர்களிடம் உள்ளது.

இந்த நேரத்தில் தான் விஸ்வரூபம் 2 பட டிரைலர் ஜுன் 11ம் தேதி மாலை 5 மணியளவில் வெளியாகும் என்ற செய்தி வந்தது. முதலில் டிரைலரை அமீர்கான் வெளியிடுகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் ஹிந்தி பதிப்பை அமீர்கான், தமிழில் ஸ்ருதிஹாசன், தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆர் வெளியிட இருக்கிறார்களாம்.