Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலா படத்தில் இந்த குறியீட்டை கவனித்தீர்களா! புகைப்படத்துடன் இதோ

காலா படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது, வசூல் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்றாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக காலா உள்ளது.

இப்படத்தில் ரஞ்சித் பல குறியீடுகளை ரசிகர்கள் பார்த்து தெரிந்துக்கொள்ளும்படி செய்திருப்பார், கிளைமேக்ஸில் கருப்பு, சிவப்பு, நீலம் என அவர் காட்டிய கலர்கள் குறியீடு எல்லாம் அனைவரும் அறிந்ததே.

இதை தொடர்ந்து தற்போது சூப்பர் குறியீடு ஒன்றை ரசிகர்கள் கண்டுப்பிடித்துள்ளனர், காலாவில் ஒரு காட்சியில் ரஜினி தன் 3வது மகனை திட்டுவார்.

அப்போது 4வது மகனை சுட்டிக்காட்டி, அவனுக்கு எனக்கு நிறைய கருத்து வேறுபாடு இருக்கும், ஆனால், அவன் இந்த மண்ணிற்காக மட்டும் தான் இப்போது வரை போராடி வருகின்றான் என கூறுவார்.

அந்த இடத்தில் ரஜினி கருப்பு கோட் அணிந்திருப்பார், இது திராவிடத்தையும், அவருடைய மகன் லெனின் சிவப்பு சட்டை அணிந்திருப்பார், இது கம்னியூசத்தையும் காட்டுகின்றது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.