Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உன்னை பற்றிய ரகசியத்தை வெளியிடுவேன்: சவால் விட்ட நிர்வாண நடிகை ஸ்ரீரெட்டி

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி சமீப காலமாக சர்ச்சைகளுக்காக அதிகம் பிரபலமாகி வருகிறார். நிர்வாண போராட்டம் நடத்திய அவர் பின்னர் பவன் கல்யாண் மற்றும் வேறு சிலரும் தொடர்ந்து சண்டை போட்டு வந்தார்.

மேலும் அவர் தற்போது நடிகர் நானி தன்னிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், பிக்பாஸ்2ல் பங்கேற்க கிடைத்த வாய்ப்பை கிடைக்காமல் செய்ததாகவும் குற்றம் சாட்டினார்.

இதற்கு நடிகர் நானி ஸ்ரீரெட்டிக்கு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறி நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு பதில் அளித்துள்ள ஸ்ரீரெட்டி. சட்டரீதியாக மோதிக்கொள்ள தயார் என கூறியுள்ளார்.

மேலும், "எனக்கு நோட்டீஸ் அனுப்பியதில் இருந்தே தெரிகிறது அவர் மீது நான் சொன்ன குற்றச்சாட்டுகள் உண்மை என்று. அவரை பற்றி பலருக்கும் தெரியாத விஷயங்களை வெளியிடுவேன்" என்று ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.