Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இளம் நடிகரை அடித்து உதைத்து துவைத்து எடுத்த மக்கள்! நடிகருக்கு நேர்ந்த பரிதாப சம்பவம் இதோ

இப்போதெல்லாம் சினிமாவில் பல நடிகர்கள், நடிகைகள் புதிதாக வருகிறார்கள். ஆனால் வெகு சிலரே இடம் பிடிக்கிறார்கள். தற்போது காதல் எனக்கு பிடிக்கும் என படம் எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் ஹீரோ, ஹீரோயின் என தனியே யாரும் கிடையாதாம். அறிகமுக நடிகர்கள், நடிகைகள் பலரும் ஒன்று சேர்ந்து நடிக்க படத்தை சக்திவேல் இயக்குகிறார்.

வேலூரில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதில் நடிகர் சூரிய வர்மன் என்பவர் படத்திற்காக முகமுடி அணிந்து நடிக்க வேண்டும் என்ற காட்சியாம்.

இதற்காக முகமுடியணிந்தவர் ஊருக்குள் சுற்றி வந்தாராம். அவரை ஊர்மக்கள் குழந்தைகளை கடத்த வந்த மர்ம நபர் என நினைத்து அடித்து உதைத்திருக்கிறார்கள்.

பின் விசயம் அறிந்த படக்குழு உடனே அந்த இடத்திற்கு சென்று மக்களை சமாதனப்படுத்தி விசயத்தை எடுத்து கூறியுள்ளது. பின் நடிகரிடம் வருத்தம் தெரிவித்தார்களாம்.