Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திடிரென விஜய்யை சந்தித்த சிவகார்த்திகேயன்! என்ன பேசினார்?

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் மிக வேகமாக வளரும் நடிகர். இந்நிலையில் நேற்று அவர் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

தளபதி62 பட ஷூட்டிங் தற்போது பின்னி மில்லில் நடந்து வருகிறது. சிவகார்த்திகேயனின் சீமராஜா கடைசி நாள் ஷூட்டிங்கும் நேற்று பின்னி மில்லில் வேறு பகுதியில் தான் நடந்தது.

விஜய் அங்கு இருப்பதை அறிந்த சிவா உடனே அவரை சந்திக்க கிளம்பிவிட்டார். இன்னும் சில நாட்களில் வரும் பிறந்தநாளுக்காக விஜய்க்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் மற்ற விஷயங்கள் பற்றியும் இருவரும் சிறிது நேரம் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டனராம்.