Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவில் விவேகம் தான் நம்பர் 1, இப்படி ஒரு சாதனையா!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க 2017 ஆகஸ்ட் மாதம் வெளியான படம், விவேகம். 130 கோடி ரூபாய் பொருட் செலவில் உருவான இப்படம் தமிழில் வசூல் ரீதியாக எதிர்ப்பார்த்த வெற்றியை தரவில்லை.

முழுக்க முழுக்க வெளிநாடுக்களில் நடப்பதுப் போன்று காட்சி அமைக்கபட்டிருந்த இப்படத்தில் அஜித்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். விவேக் ஒபராய், அக்‌ஷரா ஹாசன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

சண்டைக்காட்சிகள் நிறைந்த இப்படம் ஹிந்தியில் டப் செய்து வெளியிடப்பட்டத்தில் அங்கு மிகப்பெரும் வெற்றியடைந்தது. எந்தவொரு டப்பிங் படமும் செய்யாத சாதனையை விவேகம் அங்கு நிகழ்த்தி உள்ளது.

வெறும் நான்கு நாட்களில் யூடியுபில் மட்டும் 2 கோடி பேர் படத்தை கண்டு ரசித்துள்ளனர். இச்சாதனையை வேறு எந்த தமிழ் டப்பிங் படமும் செய்யவில்லையாம். இதனால் எல்லையற்ற மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள் உள்ளனர்.