Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் ரசிகர்களுக்கு மற்றொரு இன்ப அதிர்ச்சியை தந்த சன் பிக்சர்ஸ்!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து கொண்டிருக்கும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் வழங்கிய இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு கடந்த 21ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது.

இவை வெளியானதில் இருந்து விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம் எல்லையற்றதாகி விட்டது. இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளும் வந்துவிட்டதால் விஜய் ரசிகர்களுக்கு நேற்று தீபாவளி என்றே சொல்ல வேண்டும்.

இதற்கு மேலும் தீனி போடும் வகையில் தற்போது சர்காரின் மோஷன் போஸ்டரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் ஏ.ஆர். ரகுமான் இசை சில நிமிடங்கள் ஒலிப்பரப்பப் பட்டுள்ளது.

படத்தின் டீசரை எதிர் நோக்கி காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த மோஷன் போஸ்டர் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.