Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் சாதனைகள் இருக்கட்டும்! சூர்யா ரசிகர்கள் செய்த பிரம்மிக்க வைத்த விசயம்!

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் ஒரே விஜய் மயம் தான் என சொல்லுமளவிற்கு அமைந்துவிட்டது. அவர் தற்போது நடித்து வரும் படத்தின் போஸ்டர்கள் வெளியானது.

படத்திற்கு டைட்டில் சர்க்கார் என வைத்து விட்டார்கள். விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இது அமைந்ததால் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்கள்.

அது ஒரு பக்கம் இருக்க சூர்யா ரசிகர்கள் இனிவரும் சூர்யாவின் பிறந்தநாளுக்காக இப்போதே கொண்டாட்டத்தில் இறங்கினார்கள். இதில் தற்போது வடசென்னை சூர்யா ரசிகர்கள் 3 பேருக்கு தலா ரூ 10000 கல்வி உதவி தொகை வழங்கி சிறப்பு செய்திருக்கிறார்கள். இது பரவலாக வெளியே தெரியவில்லை.

ஏற்கனவே சூர்யா குடும்பத்தினர் அகரம் அறக்கட்டளை மூலம் பலருக்கு கல்வி சேவைகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.