Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

NGK படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் கசிந்தது, இதோ

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்றது.

இப்படத்திற்கு NGK என்று டைட்டில் வைத்துள்ளனர், இதன் அர்த்தம் தற்போது வரை யாருக்கும் தெளிவாக தெரியவில்லை.

இந்நிலையில் இப்படத்தில் சூர்யா ஒரு அரசியல் கட்சி பிரமுகராக நடிக்கின்றாராம், அரசியல் களத்தில் நடக்கும் விஷயங்களை சுவாரஸ்யமாக செல்வராகவன் எடுத்து வருவதாக கூறப்படுகின்றது.

மேலும், இப்படத்தில் சாய் பல்லவி மிகவும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.