Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவுதம் கார்த்திக்கை கலாய்த்த பிரபல நகைச்சுவை நடிகர்- சிரிப்பலையில் அரங்கம்

கவுதம் கார்த்திக் தற்போது திரு இயக்கத்தில் மிஸ்டர்.சந்திரமௌலி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படம் ஜூலை 6ம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது.

இச்சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். அப்போது சதிஷ் பேசும் போது, ’முந்தைய படங்களில் கவுதம் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார். இருட்டு அறையில் முரட்டு குத்து, ஹரஹர மஹாதேவகி என அவர் ரியலாகவே நடித்திருக்கிறார். இதல்லாம் அவருக்கு ஈசி.

ஆனால் இப்படத்தில் உண்மையாகவே கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். 2 ஹீரோயின்கள் இருந்தாலும் அவர் தான் அழகாக இருப்பார். அவரை பார்த்தாலே ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். அதுவே எங்களுக்கு உத்வேகம்.’ என தொடர்ந்து கவுதம் கார்த்திக்கை கலாய்த்து தள்ளினார்.

சதிஷ் பேச பேச அரங்கத்தில் சிரிப்பலை அதிர்ந்தது. பொதுவாகவே கவுதம் தனது படத்தில் நடிக்கும் நகைச்சுவை நடிகர்களுடன் எளிதில் நண்பராகி கொள்வார். அந்த உரிமையிலேயே சதிஷ் இவ்வாறு பேசியதாக தெரிகிறது. இதிலிருந்து படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என்பது தெரிகிறது.