Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கடைக்குட்டி சிங்கத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரிய காட்சி

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடித்து முடித்து இருக்கும் படம் கடைக்குட்டி சிங்கம். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கார்த்திக் விவசாயியாக நடித்துள்ளார். கார்த்திக் ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். இவர் சூர்யாவின் 37வது படத்திலும் நடிக்க இருக்கிறார்.

கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ் நடித்துள்ள நிலையில் இதில் அவருக்கு 5 மகள்கள் உள்ளனர். கடைசி மகன் தான் கார்த்தி. மேலும் பிரியா பவானிசங்கர், அர்த்தனா, சூரி, ஸ்ரீமன் போன்றோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தில் மாட்டுவண்டி பந்தையத்தில் வெற்றி பெறும் கார்த்திக்கு கோப்பையை தரும் சிறப்பு விருந்தினராக கார்த்தியின் அண்ணனும் படத்தின் தயாரிப்பாளருமான சூர்யா நடிக்க இருக்கிறாராம். இதுவரை எப்படத்திலும் சேர்ந்து நடிக்காத இவர்கள் இப்டத்தில் நடிப்பது அவர்களது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.