Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஷால் படத்திற்கு நோ சொன்ன ஆர்யா- சூர்யா படத்திற்கு மட்டும் ஏன் ஓகே சொன்னார்

கே.வி.ஆனந்த் இயக்கும் சூர்யாவின் 37 வது படத்தில் தற்போது ஆர்யாவும் இணைந்துள்ள தகவல் அனைவரும் அறிந்ததே. ஆர்யா ஏற்கனவே அஜித், மாதவன், விஜய் சேதுபதி போன்றோருடன் இணைந்து நடித்துள்ளார்.

ஆனால் சில வாரங்களுக்கு முன் வெளியான தனது நெருங்கிய நண்பரான விஷால் படத்தில் ஆர்யா நடிக்க மறுத்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஆம், விஷாலின் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரும் வெற்றிப் பெற்ற இரும்புத்திரை படத்தில் வில்லனாக நடிக்க முதலில் ஆர்யாவை தான் அணுகினார்களாம். என்ன காரணமோ தெரியவில்லை அவர் மறுத்துவிட்டாராம். அதன் பிறகு தான் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனை நடிக்க வைத்தார்களாம்.

நடிகர் சங்க தேர்தல், தயாரிப்பாளர் சங்க தேர்தல் உள்பட பல நிகழ்வுகளில் ஒன்றாக செயல்பட்ட இவர்களுக்குள் உண்மையிலேயே பிரச்சனையாக இருக்குமா என தெரியவில்லை. இந்த சந்தேகத்தை அவர்கள் தான் தீர்க்க வேண்டும்.