Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் சார் சொன்ன ஆறுதலால் தான் என் தங்கை சாப்பிட்டார்- பிரபல கலைஞர் உருக்கம்

தளபதி விஜய் யாருக்கு எந்த உதவி என்றாலும் ஓடி வந்து உதவக்கூடியவர். அப்படியிருக்க விஜய் தற்போதெல்லம் சமூகத்தில் நடக்கும் அவலங்களுக்கு தன் குரலை பதிவு செய்து வருகின்றார்.

அந்த வகையில் தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் உயிர் இழந்தவர்களை விஜய் நேரில் போய் பார்த்தார், அப்போது ஸ்டெண்ட் மாஸ்டர் சில்வாவின் தங்கை வீட்டிற்கும் சென்றார்.(சில்வாவின் தங்கை கணவர் துப்பாக்கி சூட்டில் இறந்தார்).

சில்வாவில் தங்கை 10 நாட்களாக சாப்பிடாமல் இருந்தாராம், விஜய் வந்து ஆறுதல் கூறி, உங்களுக்கு நான் இருக்கின்றேன் என கூறியதும் தான் அவர் சாப்பிட ஆரம்பித்தார் என சில்வா உருக்கமாக பேசியுள்ளார்.