Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் அடுத்த படத்தை இயக்க இருக்கும் இயக்குனர்- கிட்டத்தட்ட உறுதியானது

அஜித் தற்போது வீரம், வேதாளம், விவேகம் என தொடர்ந்து சிறுத்தை சிவாவுடன் நான்காவது படமாக விஸ்வாசம் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது 50 சதவிதம் முடிவடைந்துள்ளது.

படம் தீபாவளிக்கு விஜய்யின் சர்காருக்கு போட்டியாக வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் பொங்கலுக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அஜித் ரசிகர்கள் சற்று வருத்தத்துடனேயே காணப்படுகின்றனர்.

இந்நிலையில் அவர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் அஜித் அடுத்ததாக சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று முதலிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறாராம். அதிகார பூர்வமாக எத்தகவலும் கிடைக்காத நிலையில் கிட்டத்தட்ட இந்த தகவலை கோலிவுட் வட்டாரங்கள் உறுதி செய்துள்ளனர்.