Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கேரளாவில் ரூ 100 கோடி வசூலில் தளபதி விஜய்- முழு விவரம் இதோ

தளபதி விஜய்க்கு உலகம் முழுவதும் பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது. மேலும், விஜய்க்கு தமிழகத்தை தாண்டி கேரளாவில் அதிக ரசிகர்கள் படை உள்ளது.

இவை படத்திற்கு படம் அங்கு உயர்ந்துக்கொண்டே தான் போகின்றது, இந்நிலையில் விஜய்க்கு கேரளாவில் போக்கிரி படத்தின் மூலம் தான் நல்ல மார்க்கெட் உருவாகியது.

இப்படம் அங்கு ரூ 6.9 கோடி வரை வசூல் செய்தது, தற்போது போக்கிரியில் இருந்து மெர்சல் வரை மொத்த வசூலையும் பார்த்தால் கேரளாவில் மட்டுமே விஜய் படங்கள் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிலும், துப்பாக்கி, ஜில்லா, கத்தி, தெறி ஆகிய படங்கள் ரூ 10 கோடிகளுக்கு மேல், மெர்சல் ரூ 21 கோடி முறையே வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது முருகதாஸ்-விஜய்யின் சர்கார் கேரளாவில் ரூ 30 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.