Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் விஷயத்தில் டி.ராஜேந்தர் அதிரடி கருத்து

சர்கார் விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு பிரமாண்டமாக வரவுள்ள படம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு செம்ம எதிர்ப்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் சிகரெட் பிடிப்பது போல் காட்சிகள் இருந்தது, இதனால், பலரும் புகார் தெரிவிக்க, ஒரு சில வழக்கு கூட தொடர்ந்தனர்.

இதில் விஜய் ரூ 10 கோடி புற்று நோய் முகாமிற்கு கொடுக்க வேண்டும் என்று கூட கூறியிருந்தனர், இந்நிலையில் டி.ராஜேந்தர் இன்று பத்திரிகையாளரை சந்தித்து பேசினார்.

இவர் பேசுகையில் ‘புகையிலையை ஒழிக்காமல் புகைப்பிடிக்கும் காட்சிகளை எதிர்க்கின்றனர்.

தனி மனித ஒழுக்கம் நடிகர்களுக்கு அவசியம்; ஏன் விஜய் படத்துக்கு மட்டும் எதிர்ப்பு கிளம்புகிறது தமிழன் என்பதால் எதிர்க்கிறார்களா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.