Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் கார்த்திக்கு இப்படியொரு ஆசையா- நிறைவேறுவதை சூர்யா தான் முடிவு செய்ய வேண்டும்

கார்த்தி தற்போது நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார். படம் நாளைக்கு ரிலிஸாகும் நிலையில் படத்தின் ப்ரோமோஸனுக்காக ஃபேஸ்புக்கில் ரசிகர்களிடம் சமீபத்தில் கலந்துரையாடினார்.

அதில் ஒரு ரசிகர் 'சூர்யாவுடன் எப்போது நடிக்க போகிறீர்கள்?' என்ற கேள்விக்கு, அதுபோல நடிக்க வேண்டும் என எனக்கும் ஆசை தான், எங்களுக்காக பாண்டிராஜ் சார் ஒரு கதை எழுதி அது நன்றாக அமைந்தால் நிச்சயம் சேர்ந்து நடிப்போம் என்றார்.

மேலும், ‘எனக்கே என் அண்ணனை இயக்கும் ஆசை இருக்கிறது, எதிர்காலம் எப்படி அமைய போகிறது என்பதை பார்க்கலாம்’ எனவும் தெரிவித்துள்ளார்.

கார்த்தி முதன்முதலில் இயக்குனராவதற்கு தான் சினிமாவில் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.