Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்

தல அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் மாஸ் வில்லனாக நடித்திருந்தவர் நடிகர் அருண் விஜய். இவர் தற்போது ஒரு சில சின்ன படங்களில் நடித்து வருகிறார்.

என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு ஏன் வில்லனாக நடிக்கவில்லை என அவரிடம் கேட்டபோது காட்டமாக பதிலளித்தார்.

"முன்னணியில் இருக்கும் நடிகர்கள் பலர் என்னை வில்லனாக நடிக்கவைக்க அணுகினார்கள். ஆனால் அது எதுவும் `என்னை அறிந்தால்' விக்டர் அளவுக்கு இல்லை. அதனால் மறுத்துவிட்டேன். பணத்துக்காக சொதப்பலான கேரக்டர்களில் நடித்து ஹீரோக்களிடம் அடிவாங்க நான் சினிமாவுக்கு வரவில்லை" என அருண் விஜய் கூறியுள்ளார்.