Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அமலா பால் முறைகேடு செய்தாரா? புதுச்சேரி முதலமைச்சர் விளக்கம்

அமலாபால் சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக சமீபத்தில் புகார் எழுந்தது.

அமலா பாலின் சொந்த ஊரான கேரளாவில் வாங்காமல் புதுச்சேரியில் முகவரி கொடுத்து வாங்கியுள்ளார்.

இந்த சர்ச்சை பற்றி தற்போது விளக்கமளித்துள்ள புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி. ’நடிகை அமலாபால் கார் வாங்கிய விவகாரத்தில் விதி மீறல்கள் இல்லை’ என்று கூறினார்.

‘அமலாபால் வீட்டு முகவரி கொடுத்து, பிரமாணப் பத்திரத்தையும், புதுச்சேரி முகவரியில் எல்.ஐ.சி. பாலிசி பத்திரத்தையும் தாக்கல் செய்திருக்கிறார். திலாஸ்பேட்டையில் வசிப்பதாகவும், அவர் முறையான ஆவணத்தை சமர்பித்திருக்கிறார்" என்று புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜஹான்.