Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யை பிடிக்கும் ஆனால்.. : என்னை அறிந்தால் அனிகா ஒபன் டாக்

என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தவர் அனிகா. கேரளாவை சேர்ந்த இவர் தற்போது 8ம் வகுப்பு படித்துவருகிறார்.

தமிழில் படங்கள் எதுவும் இல்லை என்றாலும் சில மலையாள படங்களில் அவர் நடித்துவருகிறார். சமீபத்தில் கூட அவரது போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலானது.

இந்நிலையில் நேற்று அவர் பேஸ்புக் லைவில் பேசினார். அப்போது ரசிகர் ஒருவர் 'உங்களுக்கு பிடித்த தமிழ் நடிகர் யார்?' என கேட்டதற்கு "அஜித் சார்.." என கூறினார். விஜய்யை பிடிக்காத? என மற்றொருவர் கேட்டதற்கு, "விஜய்யை பிடிக்கும்.. அவரது டான்ஸ் பிடிக்கும், பட் அஜித் சாரை அதிகம் பிடிக்கும்" என அனிகா கூறினார்.