Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா- வீடியோ உள்ளே

ராஜா ராணி என்ற சீரியலில் செண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஆல்யா மானசா. இவர் நடிப்பது மட்டுமில்லாமல் நன்றாகவும் நடனம் ஆடுவார். சமீபத்தில் ஒரு பேட்டியில் சூட்டிங், பிறகு சில நிகழ்ச்சிக்கு செல்வது என பிஸியாக இருப்பதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் இவர் ஒரு கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக சென்றிருக்கிறார். அங்கு அதிக கூட்டம் கூடியதால் அவரால் யாருடனும் புகைப்படம் எடுக்க முடியவில்லையாம். இதனால் தன்னுடைய அறைக்கு வந்த ஆல்யா ஒரு வீடியோ மூலம் என்னை மன்னித்துவிடுங்கள், யாருடனும் புகைப்படம் எடுக்க முடியவில்லை என ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு டுவிட்டரில் வீடியோ பதிவு செய்துள்ளார்.