Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வாய்ப்புகள் குறைந்ததால் ஸ்ரீதிவ்யா அதிரடி முடிவு

நடிகை ஸ்ரீதிவ்யா தமிழில் அறிமுகமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் வெற்றி பெற்ற பிறகு, திரையில் கவர்ச்சி காட்டாமல் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

கடைசியாக அவரது நடிப்பில் வந்த படம் சங்கிலி புங்கிலி கதவ தொற. அதன் பிறகு ஸ்ரீதிவ்யாவுக்கு தமிழில் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை.

அதனால் தற்போது அவர் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளாராம். முன்னணியில் உள்ள இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் ஸ்ரீதிவ்யா.