Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னை மாமிசம் போல வியாபாரம் செய்திருப்பார்கள்- அமலா பால் அதிரடி விளக்கம்

அமலா பால் சமீப காலமாக பல சர்ச்சைகளில் அடிப்பட்டு வருகின்றார். இவரை மலேசியாவை சார்ந்த ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக போலிஸில் புகார் கொடுத்தார்.

போலிஸும் உடனே அதற்கு நடவடிக்கை எடுத்து, அழகேசன் என்பவரை கைது செய்து விசாரித்து வந்தது.

இந்நிலையில் அமலா பாலின் இந்த செயலுக்கு நடிகர் விஷால் பாராட்டு தெரிவித்தார், இதற்கு அமலா பால் தன் நன்றியை தெரிவித்துள்ளார்.

இதோடு ’இதுபோல் பாலியல் தொல்லைகளை பெண்கள் சகித்துக்கொண்டு இருக்கக்கூடாது, அதை எதிர்த்து போராட வேண்டும்.

மேலும், என்னை ஒரு மாமிச துண்டைப்போல் வியாபாரம் செய்ய நினைத்தார்கள், அவரின் பேச்சு என்னை கடும் எரிச்சலை ஏற்படுத்தியது’ என்று கூறியுள்ளார்.

Comments