Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மேயாத மான் புகழ் இந்துஜாவுக்கு வந்த புரோபசல் - அவருக்கு வயது என்ன தெரியுமா?

மேயாத மான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இளம் ரசிகர்களின் கவனத்திற்கு வந்தவர் இந்துஜா. இவர் தன் நடிப்பால் அனைவரின் மனதிலும் இடம்பிடித்து தற்போது பல படங்களில் பிஸியாக இருக்கிறார்.

தற்போது இவர் தன்னுடைய காதல் பற்றி நிறைய சுவாரஸ்யமான தகவல்களை ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நான் இன்னும் யாரையும் காதலிக்கவில்லை. அப்படி காதலித்தால் முதலில் என் தங்கை மற்றும் அண்ணனிடம் தான் முதலில் கூறுவேன். அவர்களை சமாளித்தால் வீட்டில் சரியாகிவிடும்.

காதலித்தால் அவருடன் தனியே காரில் நீண்ட தூரம் பயணிக்கனும். எனக்கு மிகவும் பிடித்த காதல் படங்கள் என்றால் மின்னலே, அலைபாயுதே தான் என் முதல் சாய்ஸ். எனக்கு நான் முதல் வருட கல்லூரி படிக்கும் போது ஒருவரிடம் இருந்து புரபோஸல் வந்தது. பிறகு பார்த்தால் அவர் ஒன்பதாவது படிக்கும் சின்ன பையன். நான் பெரியவள் என்று தெரிந்ததும் அவனுக்கு எப்படி சமாளிப்பது என்பது தெரியவில்லை. அது மிகவும் காமெடியா இருந்தது, கொஞ்சம் சொதப்பலாகவும் இருந்தது என்றார்.

Comments