Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காதல் தோல்வி பற்றி மனம்திறந்த ரைசா

ரைசா விஐபி2 படத்தில் வசனமே இல்லாத ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார்.

தற்போது ஹரிஷ் கல்யாண் ஜோடியாக பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்துவருகிறார். சமீபத்தில் கூட இந்த படத்திலிருந்து ஒரு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ரைசா சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில் தன் முதல் காதல் பற்றி பேசியுள்ளார். "கல்லூரியில் படிக்கும்போது ஒரு காதல் வந்தது. சினிமாவுக்கு எல்லாம் சென்றோம். ஆனால் அந்த காதல் கடைசியில் வெற்றி பெறவில்லை, பிரிந்துவிட்டோம்" என கூறியுள்ளார்.