Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற நாகினி சீரியலின் 3ம் பாகத்தில் மௌனி ராய் இல்லையா? இவர்தான் நடிக்கிறாரா?

ஹிந்தி சீரியல்கள் நிறைய தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. அதில் இளைஞர்களால் மிகவும் டிரெண்டான ஒரு சீரியல் நாகினி. அதில் நடித்த மௌனி ராய் என்பவருக்காகவே ரசிகர்கள் சீரியலை பார்த்தார்கள் என்றே கூறலாம். இந்த சீரியலின் 3ம் பாகம் விரைவில் தொடங்க இருக்கிறது.

அதில் மௌனி ராய் நடிக்கவில்லை என்று ஏற்கெனவே செய்திகள் வெளிவந்தன, தற்போது அவருடைய வேடத்தில் நடிக்க இருப்பவர் Qubool Hai என்ற சீரியல் மூலம் பிரபலமான சுர்பி ஜோதி தான் என்று கூறப்படுகிறது.

அண்மையில் கூட இவர் நீளமாக இருந்த தன் தலைமுடியை பாதியாக கட் செய்துள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, நாகினி 3 சீரியலில் விக் அணிய வேண்டும் என்று கூறுகின்றனர். அதற்கு பதிலாக என் தலைமுடியிலேயே நான் சில விஷயங்களை செய்து பார்த்துக் கொள்கிறேன். இதற்கு முன் இருந்த சீரியல்களில் நான் நீளமான தலைமுடி தான் வைத்திருந்தேன் என்றார்.