Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சமூக வலைதள பிரபலம் பிரியா வாரியருக்கு வீட்டில் இப்படி ஒரு கண்டீஷனா?

ஜிமிக்கி கம்மல் புகழ் ஷெரிலை தொடர்ந்து சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர் பிரியா வாரியர். ஒரே ஒரு பாடலில் சின்ன காட்சியில் வந்து ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களை கவர்ந்துவிட்டார் என்றே கூறலாம்.

இவரை பற்றியும் அடுத்தடுத்த படங்கள் குறித்தும் நிறைய செய்திகள் வருகின்றன. இந்த நிலையில் அவரை பற்றி இதுவரை தெரியாத தகவலை கூறியுள்ளார் பிரியாவின் அப்பா பிரகாஷ். அதாவது, பிரியா வாரியர் செல்போன் உபயோகிக்க அவரது பெற்றோர்கள் அனுமதிப்பது இல்லையாம்.

பிரியா இதுவரை அவரின் அம்மாவின் செல்போனை தான் பயன்படுத்தி வருகிறாராம். வீட்டில் மொபைல் ஹாட்ஸ்பாட் போட்டால் மட்டுமே ப்ரியா அவரின் செல்போனை பயன்படுத்துவாராம்.