Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்க்கு மகளாக மாறிய என்னை அறிந்தால் அனிகா - வைரலாகும் வீடியோ

என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்திருந்தவர் அனிகா. கேரளாவை சேர்ந்த இவருக்கு என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது படிப்பு மற்றும் ஒருசில மலையாள படங்களில் நடித்துவரும் அனிகா சமீபத்தில் தன் முகநூல் பக்கத்தில் ஒரு டப்ஸ்மாஷ் விடியோவை பதிவிட்டிருந்தார். அதில் தெறி படத்தில் பேபி நைனிகா தன் அப்பா விஜய்யோடு காமெடியாக பேசிய வசனத்தை நடித்து காட்டியுள்ளார்.

இந்த விடீயோ ரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.