Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இது மட்டும் நடந்தால் நான் சினிமாவை விட்டு செல்லவும் தயார்- த்ரிஷாவே சொன்னாரா!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து 12 வருடங்களாக முன்னணியில் இருக்கும் நாயகி த்ரிஷா. இவர் தற்போதெல்லாம் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் தான் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் தற்போது இவர் கர்ஜனை, 96 இது மட்டுமின்றி லேடி ஜேம்ஸ்பாண்டு போலவும் ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.

த்ரிஷா தமிழ் சினிமாவில் கமலில் ஆரம்பித்து விஜய் சேதுபதி வரை நடித்து விட்டார்(விஜய் சேதுபதியுடன் 96 படத்தில் நடித்து வருகின்றார்).

அப்படியிருக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்கவேண்டும் என்பதே அவரின் விருப்பமாம், அதுமட்டும் இதுநாள் வரை நடக்கவில்லை.

இதுமட்டும் நடந்தால் நான் சினிமாவை விட்டு கூட போய் விடுவேன் என த்ரிஷா ஜாலியாக சில வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் கூறியுள்ளாராம்.