Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல சீரியல் நடிகை ஸ்ருதி ராஜை விஜய் இப்படியா செய்தார்?- நடிகை கூறிய தகவல்

அழகு, அபூர்வ ராகங்கள், துளசி போன்ற சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்தவர் ஸ்ருதி ராஜ்.

இளைஞர்களின் பேவரெட் நாயகியான இவர் நிறைய சிறந்த நடிகை, சீரியல்களுக்கு ஏற்ற சிறந்த ஜோடி போன்ற தொலைக்காட்சி விருதுகளை வாங்கியுள்ளார்.

தற்போது பிஸியாக இரண்டு சீரியல்களில் நடித்துவரும் இவர் சினிமா பயணம் குறித்து பேட்டியளித்திருந்தார்.

அப்போது எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களின் இயக்கத்தில் விஜய்யுடன் மாண்புமிகு மாணவன் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியிருந்தார்.

அந்த படத்தில் முதன்முறையாக புடவை கட்டியிருந்தேன், அதில் நடக்க சொன்னாலே தெரியாது, ஓடிபோய் பஸ் பிடிக்க வேண்டும். நான் தயங்கி நின்றுகொண்டிருந்ததை பார்த்த விஜய் ஓட முடியவில்லையா, நான் பிடித்துக் கொள்கிறேன் நீங்கள் அப்படியே ஓடிவாருங்கள் என்றார்.

இப்போது நினைத்தால் விஜய் அவர்களா என்னை பிடித்துக் கொண்டு ஓடினார் என்ற சந்தோஷம் இருக்கிறது என்று பேசியுள்ளார்.