Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தானா சேர்ந்த கூட்டம் தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்: பிரபல நடிகை

ரசிகர்களை பெருமைப்படுத்தும் விதமாக நடிகர் சூர்யா தான் நடித்த படத்திற்கு 'தானா சேர்ந்த கூட்டம்' என பெயர் வைத்திருந்தார்.

தற்போது அதே பெயரை வைத்து நடிகை கஸ்தூரி ரசிகர்களை விமர்சித்துள்ளார்.

போராட்டம் நடத்துபவர்களால் பொது மக்களுக்கு தான் பிரச்சனை என ட்விட்டரில் கஸ்தூரி கூற, சினிமாகாரர்களால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட போது எங்கே போனீர்கள் என ட்விட்டரில் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த கஸ்தூரி "மனசாட்சியை தொட்டு சொல்லுங்க - சினிமாக்காரங்களால சாலை நெரிசல் ஏற்படுதா , இல்லை அவங்களை பாக்க முண்டியடிச்சுட்டு போயி நிக்கற தானா சேர்ந்த கூட்டத்தாலயா?" என கேள்வி கேட்டுள்ளார்.