Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டிவியில் RJ பாலாஜி பேசியதை கேட்டு ஷாக் ஆன பிரபல நடிகை

நடிகர் RJ பாலாஜி ஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வர்ணனையாளராக உள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று நடந்த சென்னை-மும்பை போட்டிக்கு தமிழில் அவர் வர்ணனை செய்தார்.

போட்டியின் போது அச்சு அசலாக நடிகை கஸ்தூரி போலவே இருந்த ஒரு பெண் டிவியில் காட்டப்பட்டார். அதை பார்த்து சர்ப்ரைஸான RJ பாலாஜி கஸ்தூரி மேட்ச் பார்க்க வந்துள்ளாரா அல்லது இந்த பெண் அவரை போலவே உள்ளாரா என கேள்வி எழுப்பினார்.

இது பற்றி கேள்விப்பட்டு நடிகை கஸ்தூரி ட்விட்டரில் "நான் சென்னையில் தான் இருக்கிறேன். இன்று மாலை முழுவதும் ஷூட்டிங்கில் இருந்தேன், மேட்ச் பார்க்க முடியவில்லை" என சோகமாக கூறியுள்ளார்.